சுதந்திர தினவிழா ஒத்திகை நடைபெறுவதை ஒட்டி ஆகஸ்ட் 6,11,13 15 -ம் தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் முழு விபரம்:
நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.
போர் நினைவுச் சின்னம் – ரிசர்வ் வங்கி சுரங்க பாதை வடக்கு வரை ராஜாஜி சாலை, கொடிமரச் சாலையில் போக்குவரத்து தடை,
காமராஜர் சாலை முதல் ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி சாலை, வடக்கு கோட்டை பக்க சாலை வழியே பாரிமுனை போகலாம்.
பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை வழியே செல்லும் வாகனங்கள் வடக்கு கோட்டை பக்க சாலை, அண்ணா சாலை, முத்துசாமி சாலை, வாலாஜா சாலை வழியே காமராஜர் சாலை செல்லலாம்.
அண்ணா சாலையில் இருந்து கொடிமரச் சாலை வழியே பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை வழியே செல்லலாம்.
முத்துசாமி சாலையில் இருந்து கொடிமரச் சாலை வழியே காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் வாலாஜா சாலை வழியே செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- க.சீனிவாசன்
