உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலைச் சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்கும்போது பின்னணியில் தெரியும் தாஜ்மகால் பனி மூட்டத்தால் மறைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வடஇந்தியாவில் கடுங்குளிர் நிலவி வருகிறது. பனிமூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம் போன்று காட்சியளிக்கிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் தரைப்பகுதியில் படர்ந்துள்ளது. டெல்லி மட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப், அரியானாவிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுகிறது.

பஞ்சாப்பின் அமிர்சரஸில் எதிரே உள்ளவர்களைப் பார்க்க முடியாத அளவுக்கு பனி மூட்டம் சூழ்ந்துள்ளது. டெல்லியில் 25-க்கும் மேற்பட்ட ரயில்கள் கால தாமதமாக புறப்பட்டன. டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேரும், புறப்படும் விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ் வே சாலையில் பல வானங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியதில் ஒருவர் பலியானார்.
இந்த நிலையில், உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலைச் சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர். அவர்கள் புகைப்படம் எடுக்கும்போது பின்னணியில் தெரியும் தாஜ்மகால் பனி மூட்டத்தால் மறைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் அந்தக் காட்சியையே புகைப்படமாக எடுத்துச் சென்றனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: தொப்பையைக் குறைக்க எளிய வழி உண்டா?
விஜயகாந்துக்கு கொரோனா: வென்டிலேட்டரில் சிகிச்சை!
