எகிப்தில் விபரீதத்தில் முடிந்த சிந்துபாத் நீர்மூழ்கி சுற்றுப்பயணம்… என்ன நடந்தது?

Published On:

| By Kumaresan M

ஆப்ரிக்க கண்டத்தில் சுற்றுலா மூலம் ஆண்டுக்கு 14 பில்லியன் அமெரிக்க டாலர்களை எகிப்து வருவாயாக ஈட்டுகிறது. இங்குள்ள செங்கடல் சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான பகுதி ஆகும். செங்கடலை காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.Tourist submarine sinks in Egypt

இந்த கடலையொட்டியுள்ள ஹர்ஹாடா என்ற சுற்றுலா நகரத்தில் சிந்துபாத் சப்மரைன் என்கிற நிறுவனம் இரு நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்கி வருகிறது. ஒவ்வொரு நீர்மூழ்கிக் கப்பலிலும் 44 சுற்றுலாப் பயணிகள் பயணிக்கலாம். இரு பைலட்டுகள் கப்பலை இயக்குவார்கள்.

கடலுக்கு அடியில் 25 முதல் 75 மீட்டர் வரை ஆழத்தில் இந்த நீர்மூழ்கிக் கப்பல் செல்லும். நீர்மூழ்கிக் கப்பலில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத கண்ணாடி வழியாக சுற்றுலாப் பயணிகள் கடல் வாழ் உயிரினங்களை பார்க்க முடியும்.

நேற்று (மார்ச் 27) காலை 10 மணியளவில் ரஷ்யா, இந்தியா, நார்வே, ஸ்வீடனை சேர்ந்த 44 பயணிகளுடன் சிந்துபாத் நீர்மூழ்கிக்கப்பல் கடலுக்கு அடியில் சென்றது. சுமார் 40 நிமிடங்கள் கடலுக்கு அடியில் சுற்றி பார்ப்பது பயண திட்டமாக இருந்தது.

ஆனால், கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் சென்ற போது, கப்பல் சமனை இழந்து மூழ்கத் தொடங்கியது. உடனடியாக, கப்பலின் கேப்டன் தரை கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.

தகவல் கிடைத்ததும் மின்னல் வேகத்தில் செயல்பட்ட மீட்ப்புப்படையினர் கடலுக்கு அடியில் சென்று சுற்றுலாப் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், ரஷ்யாவை சேர்ந்த 6 சுற்றுலாப் பயணிகள் பலியாகி விட்டனர். மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். Tourist submarine sinks in Egypt

கப்பல் விபத்தில் சிக்கிய போது, கால நிலை அமைதியாகவே காணப்பட்டுள்ளது. கப்பல் இயக்குவதற்கான அனைத்து தகுதிகளுடனே இருந்துள்ளது. முறையான லைசென்சுடன் பயிற்சி பெற்ற கேப்டனால் கப்பல் இயக்கப்பட்டுள்ளது. எனினும், விபத்து நடந்தது எப்படி? என எகிப்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், தொழில்நுட்பக் கோளாறு நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share