ரெட்ரோ படத்தின் ஒட்டுமொத்த கலெக்சனை, டூரிஸ்ட் ஃபேமிலி முந்திவிட்டதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கச் செயலாளர் ஸ்ரீதர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. tourist family crossed retro lifetime collection – sridhar
கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அவரது மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் படைத்தலைவன். அறிமுக இயக்குநர் அன்பு எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மே 15) நடைபெற்றது. அதில் தேமுதிக பொதுச்செயலாளரும், சண்முக பாண்டியனின் தாயுமான பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், சசிக்குமார், ஏ. ஆர் முருகதாஸ், கஸ்தூரி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கச் செயலாளர் ஸ்ரீதர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் பேசுகையில், “டூரிஸ்ட் ஃபேமிலி பட வெற்றிக்கு பிறகு சசிகுமார் சம்பளம் உயர்த்தமாட்டேன் என சொன்னதற்கு தயாரிப்பாளர் சார்பாக தியேட்டர்காரங்க நாங்க சந்தோசப்படுகிறோம். அவரது படம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
கடந்த 5 மாதத்தில் கலெக்சன் ரீதியாக பார்க்கும்போது எக்ட்ராடினரி! குழந்தைகளோட பேமிலியாக இந்த படத்தை வந்து தியேட்டரில் பார்க்கிறார்கள். எங்களுக்கு இந்த படத்தின் டெர்ம்ஸ் கம்மி, அதனால் லாபம் அதிகம்.
இன்னும் சொல்லப்போனால் ரெட்ரோ படத்தின் ஒட்டுமொத்த கலெக்சனை, டூரிஸ்ட் ஃபேமிலி முந்திவிட்டது. இதை நான் ஓபனாக அறிவிக்கிறேன்.
அதனால் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள் சசிசார். இது கண்டிப்பாக தொடர வேண்டும்” என ஸ்ரீதர் பேசினார்.
“
