விக்கிரவாண்டி வாக்கு எண்ணிக்கை!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(ஜூலை 13) நடைபெறுகிறது.
மோடி மும்பை பயணம்!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ரூ.29,400 கோடி மதிப்பீட்டில் சாலை, ரயில்வே, துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை, சிதம்பரம், பெரம்பலூர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
குரூப் 1 முதல்நிலை தேர்வு!
துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 80 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை!
ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தகன் டீசர் ரிலீஸ்!
தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த அந்தகன் படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
இந்தியா – ஜிம்பாப்வே மோதல்!
இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதும் நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 118-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கென்யா – நைஜிரியா மோதல்!
ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் கென்யா – நைஜிரியா அணிகள் இன்று மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
