அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு!
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (ஜூலை 12) தீர்ப்பளிக்கிறது.
எடப்பாடி ஆலோசனை!
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அரக்கோணம், தஞ்சாவூர், திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு!
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்தியன் 2 ரிலீஸ்!
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2, பார்த்திபன் இயக்கியுள்ள டீன்ஸ் ஆகிய திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
பத்திரப்பதிவு கூடுதல் டோக்கன்!
ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த நாளான இன்று சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திர பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.
குடமுழுக்கு திருவிழா!
தமிழகம் முழுவதும் இன்று 65 கோவில்களில் குடமுழுக்கு திருவிழா நடைபெற உள்ளது.
தி கோட் புரோமோ!
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் விசில் போடு புரோமோ இந்தியில் இன்று வெளியாகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடுகள் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கென்யா – நைஜிரியா மோதல்!
இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் கென்யா – நைஜிரியா அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 117-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை 92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை கைது? களத்தில் குதிக்கும் அமித் ஷா… பரபரப்புத் திருப்பங்கள்!