டாப் 10 நியூஸ்: விக்கிரவாண்டி வாக்குப்பதிவு முதல் அதிமுக ஆலோசனை வரை!

Published On:

| By Selvam

விக்கிரவாண்டி வாக்குப்பதிவு!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஜூலை 10) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

எடப்பாடி ஆலோசனை!

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக இன்று முதல் ஆலோசனை மேற்கொள்கிறார். அந்தவகையில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நிர்வாகிகளுடன் இன்று சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

தங்கலான் டிரைலர் ரிலீஸ்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.

இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதல்!

இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

பொறியியல் தரவரிசை‌ வெளியீடு!

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இன்று வெளியிடுகிறது.

ஸ்பெயின் – பிரான்ஸ் மோதல்!

யூரோ கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் – பிரான்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

தெருநாய் கணக்கெடுக்கும் பணி!

சென்னை மாநகராட்சியில் தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்குகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 117-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: கேஷு தம் புலாவ்

பி.எஸ்.என்.எலையும் வித்துருவாங்களா? : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share