டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

top ten news september 24

மனதின் குரல் நிகழ்ச்சி!

பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே இன்று (செப்டம்பர் 24) உரையாற்றுகிறார்.

வந்தே பாரத் ரயில்!

நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று துவக்கி வைக்கிறார்.

திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்!

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.

ஆர்டிஎக்ஸ் திரைப்படம் வெளியீடு!

நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் ஷேன் நிகாம் நடித்த மலையாள திரைப்படம் ஆர்டிஎக்ஸ் நெட்ஃபிளிக்ஸில் இன்று வெளியாகிறது.

கனிமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம்!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அக்டோபர் 14-ஆம் தேதி திமுக மகளிரணி சார்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்காக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா மோதல்!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

நாட்டு நலப்பணி திட்ட நாள்!

நாட்டு நலப்பணி திட்ட நாளான இன்று தன்னார்வலர்கள், மாணவர்கள் இணைந்து தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட உள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 491-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

திறன் போட்டி தேர்வு!

நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான திறன் போட்டி தேர்வு இன்று நடைபெறுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சண்டே ஸ்பெஷல்: எடையைக் குறைத்த பிறகு உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் ஆயுள் முழுக்க அவசியமா?

தொழில்‌ நிறுவனங்களின் மின்‌ கட்டணம் குறைக்க முதல்வர் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share