உதயநிதி வழக்கு விசாரணை!
சனாதான ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி ஜெகன்நாத் என்பவர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
கோவை மக்கள் நீதி மய்யம் கூட்டம்!
கோவை மண்டல மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று கோவையில் நடைபெறுகிறது
கொடைக்கானல் சுற்றுலா அனுமதி!
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
புதுவையில் மதுக்கடைகள் அடைப்பு!
புதுச்சேரியில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட உள்ளதால் மதுக்கடைகள் அடைக்கப்படுகின்றன.
போதைப்பொருள் இல்லா இந்தியா ஒப்பந்தம்!
போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் காயத்ரி பரிவார் இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
ரெட் சாண்டல் படம் ரிலீஸ்!
குரு ராமானுஜம் இயக்கத்தில் வெற்றி, ராமச்சந்திர ராஜூ நடித்த ரெட் சாண்டல் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா மோதல்!
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருப்பதி பிரம்மோற்சவம்!
திருப்பதி பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான இன்று கருட வாகனத்தில் மலையப்பர் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
பெட்ரோல், டீசல் நிலவரம்!
சென்னையில் இன்று 489-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கிச்சன் கீர்த்தனா: முருங்கைக்கீரை முட்டை பொரியல்
சின்ன பிரச்சினைக்கெல்லாம் எதுக்குங்க கோர்ட், கேஸ்னு… அப்டேட் குமாரு