விஸ்வகர்மா பயனாளிகளுக்கு சான்றிதழ்!
பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 20) மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் விஸ்வகர்மா பயனாளிகளுக்கு சான்றிதழ் மற்றும் கடனுதவி வழங்குகிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!
தமிழக மீனவர்களை இலங்கை அரசு மொட்டை அடித்து அவமானப்படுத்தியதை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமேஸ்வரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
வார விடுமுறையை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று முதல் செப்டம்பர் 22 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு!
சென்னை உள்பட நாடு முழுவதும் 24 நகரங்களில் இன்று ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ். ஐஏஏஎஸ், ஐஐஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு நடைபெறுகிறது.
பாஸ்போர்ட் சேவை!
தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக, பாஸ்போர்ட் சேவை இணையதளம் இன்று முதல் செப்டம்பர் 23-ஆம் தேதி வரை இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார தியேட்டர் ரிலீஸ்!
இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘நந்தன்’, ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘கடைசி உலகப்போர்’, சீனு ராமசாமி இயக்கியுள்ள ‘கோழிப்பண்ணை செல்லதுரை’, அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘லப்பர் பந்து’, சத்தியராஜ் நடித்துள்ள ‘தோழர் சேகுவேரா’, காளி வெங்கட் நடித்துள்ள ‘தோனிமா’ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 187-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வேட்டையன் ஆடியோ லாஞ்ச்!
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் ஆடியோ லாஞ்ச் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
வங்கதேசம் – இந்தியா டெஸ்ட்!
வங்கதேசம் – இந்தியா இடையே நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…