டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Minnambalam

சபாநாயகர் மாநாடு!

ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர் மாநாட்டை பிரதமர் மோடி இன்று (அக்டோபர் 13) டெல்லியில் தொடங்கி வைக்கிறார்.

ADVERTISEMENT

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!

தமிழ்நாட்டிற்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் இன்று டெல்லியில் கூடுகிறது.

ADVERTISEMENT

ஏவிபி ஆசைத்தம்பி நூற்றாண்டு விழா!

சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று நடைபெறும் ஏவிபி ஆசைத்தம்பி நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

ADVERTISEMENT

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான இடைக்கால அறிக்கையை சிபிசிஐடி போலீசார் இன்று உதகை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.

திருப்பதி பிரம்மோற்சவம்!

திருப்பதி பிரம்மோற்சவம் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்திலிருந்து இன்று திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

மார்க் ஆண்டனி ஓடிடி ரிலீஸ்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்த மார்க் ஆண்டனி படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது.

பெட்ரோல். டீசல் விலை!

சென்னையில் இன்று 510-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்ய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நியூசிலாந்து, வங்கதேசம் மோதல்!

இன்றைய ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: குதிரைவாலி பொங்கல்

இனி நோக்கியா ஃப்ளிப் மாடலிலும் UPI ஸ்கேன் வசதி!

காத்து அடிக்குது… காத்து அடிக்குது… அப்டேட் குமாரு

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share