மனதின் குரல் நிகழ்ச்சி!
மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி இன்று (நவம்பர் 24) நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.
முத்தமிழ் பேரவை பொன் விழா ஆண்டு!
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் முத்தமிழ் பேரவையின் பொன் விழா ஆண்டு இசை விழா, விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்க உள்ளார்.
ஜானகி நூற்றாண்டு விழா!
தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும் எம்ஜிஆரின் மனைவியுமான ஜானகியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி அதிமுக சார்பில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் இன்று நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை (நவம்பர் 25) முதல் தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதான குழு அறையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது.
ரயில் சேவையில் மாற்றம்!
பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று முதல் நவம்பர் 28-ஆம் தேதி வரை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள், மதியம் 1.20 மணி முதல் மாலை 4.20 மணி வரை சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும்.
வாக்காளர் சிறப்பு முகாம்!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்வதற்கு ஏதுவாக தமிழகம் முழுவதும் இன்று இரண்டாவது நாளாக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
தேசிய மாணவர் படை நிறுவன தினம்!
தேசிய மாணவர் படையின் (NCC) 76-ஆவது நிறுவன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.03-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.61-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜிம்பாப்வே – பாகிஸ்தான் மோதல்!
ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள குயின்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: பால் சேர்த்த… பால் சேர்க்காத காபி, டீ… உங்களுக்கு எது பிடிக்கும்?