டாப் 10 நியூஸ்: மோடி வயநாடு விசிட் முதல் ‘வாழை’ பாடல் ரிலீஸ் வரை!

Published On:

| By Selvam

மோடி வயநாடு பயணம்!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 10) நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆடி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக சென்னையில் இருந்து பெரியபாளையம் கோவிலுக்கு இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கனமழை விடுமுறை!

கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை – அபுதாபி விமான சேவை!

இண்டிகோ நிறுவனம் சார்பில் கோவை – அபுதாபி இடையே இன்று முதல் நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது.

வாழை பாடல் ரிலீஸ்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை படத்தின் நான்காவது பாடல் இன்று வெளியாகிறது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தங்கலான் டிக்கெட் புக்கிங்!

ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாக உள்ள தங்கலான் மற்றும் டிமான்டி காலனி – 2 ஆகிய படங்களின் டிக்கெட் புக்கிங் இன்று முதல் தொடங்குகிறது.

வெண்கலம் வென்ற அமன் ஷெராவத்

பாரிஸ் ஒலிம்பிக் 2024 ஆடவர் பிரீஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்தியா சார்பில் அமன் ஷெராவத் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா விளையாடும் இன்றைய ஒலிம்பிக் போட்டிகள்!

கோல்ஃப் – 4-வது சுற்று – அதீதி அசோக், திக்சா தஹார்

மகளிர் 76 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தம் – ரித்திகா ஹுடா

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 146-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: எலுமிச்சை மஷ்ரூம் பீஸ் சேமியா புலாவ்

சோகமா இருக்காறாம் : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share