top ten news today in Tamil march 8 2024
தேசிய படைப்பாளர்கள் விருது!
பிரதமர் மோடி இன்று (மார்ச் 8) டெல்லி பாரத் மண்டபத்தில் தேசிய படைப்பாளர்கள் விருதை வழங்குகிறார்.
அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்!
தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றிட, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் 213 பேருக்கு நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திக்கான கடனுதவிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.
புதுச்சேரி பந்த்!
புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து, இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
மகாசிவராத்திரி விழா!
கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மகாசிவராத்திரி விழா நடைபெறுகிறது.
மகளிர் தினம்!
பெண்களின் சமூக, பொருளாதார, அரசியல் சார்ந்த பங்களிப்புக்கு மரியாதை வழங்கும் விதமாக உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
இன்று வெளியாகும் திரைப்படங்கள்!
ஊர்வசி நடித்த ஜே பேபி, கார்டியன், சிங்கப்பெண்ணே, அரிமாபட்டி சக்திவேல், நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, டெவில் ஹண்டர்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 657-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘Amigo Garage’ டிரெய்லர் ரிலீஸ்!
மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘Amigo Garage’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.
டெல்லி, யுபி வாரியர்ஸ் மோதல்!
இன்றைய பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், யுபி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பச்சை மிளகாய் மோர் வற்றல்
’யாருகிட்ட என்ன கேக்குறீங்க ஆபிசர்?’ : அப்டேட் குமாரு
top ten news today in Tamil march 8 2024