டாப் 10 நியூஸ்: அனைத்து கட்சி கூட்டம் முதல் பாஜக கையெழுத்து இயக்கம் வரை!

Published On:

| By Selvam

பட்ஜெட் கருத்தரங்கு!

பட்ஜெட்டுக்கு பிந்தைய வேலைவாய்ப்பு குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் மோடி இன்று (மார்ச் 5) கலந்து கொண்டு உரையாற்றுகிறார். Top ten news today

அனைத்து கட்சி கூட்டம்!

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

மும்மொழிக் கொள்கை கையெழுத்து இயக்கம்!

மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி இன்று முதல் தமிழக பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட உள்ளது. ஒரு கோடி கையெழுத்து பெற்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோனியம்மன் கோவில் தேரோட்டம்!

கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த திருவிழாவை ஒட்டி கோவிலை சுற்றியுள்ள 24 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

11-ஆம் வகுப்பு தேர்வு!

தமிழகத்தில் இன்று 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் 8,23,261மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

பங்குனி திருவிழா கொடியேற்றம்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அரையிறுதி!

பாகிஸ்தான் கடாபி மைதானத்தில் இன்று நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்ககூடும்.

இந்தியா வெற்றி!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share