டாப் 10 நியூஸ்: நீர்வளத்துறை மானியக்கோரிக்கை முதல் அனைத்து கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை வரை!

Published On:

| By Selvam

திரவுபதி முர்மு ஒடிசா பயணம்!

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக இன்று (மார்ச் 24) ஒடிசா மாநிலத்திற்கு செல்கிறார். top ten news today

இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!

திமுக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு சார்பில் சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெறும் ரமலான் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

அனைத்துக் கட்சி கூட்டம்!

சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அனைத்துக் கட்சி தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

நீர்வளத்துறை மானியக்கோரிக்கை!

தமிழக சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெறுகிறது. விவாதங்களுக்கு பதில் அளித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

விஜய் சேதுபதி புதிய படம்!

நரேந்திரன் மூர்த்தி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகிறது.

திருப்பதி தரிசன டிக்கெட்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாத தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் இன்று தொடங்குகிறது.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்ககூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மார்ச் 24) நடைபெற்ற போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

டெல்லி – லக்னோ மோதல்!

விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. top ten news today

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share