நலத்திட்ட உதவிகள்! top ten news today in Tamil march 13 2024
திருப்பூரில் மத்திய அரசின் சூரஜ் திட்டத்தின் கீழ் 300 பேருக்கு ஆளுநர் ரவி இன்று (மார்ச் 13) நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை எழும்பூரில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
செந்தில் பாலாஜி வழக்கு!
சிறப்பு நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பளிக்கும் வரை அமலாக்கத்துறை வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
மனிதநேய மக்கள் கட்சி கூட்டம்!
நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து விவாதிக்க, மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது.
பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி!
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில் இன்று முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஐயப்பன் கோவில் நடைதிறப்பு!
மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 662-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஓட்டுநர் பழகுனர் உரிமம்!
வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் LLR பெற இன்று முதல் இ – சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜராத், டெல்லி மோதல்!
இன்றைய பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் குஜராத் கேப்பிட்டல்ஸ், டெல்லி அணிகள் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : தஞ்சாவூர் அசோகா அல்வா
”ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் குஷ்புவிற்கு பதிலளிப்பார்கள்” : கீதாஜீவன்
top ten news today in Tamil march 13 2024