செந்தில் பாலாஜி வழக்கு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு இன்று (ஜூன் 22) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
பீகார் செல்லும் முதல்வர்!
வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பீகார் செல்கிறார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி!
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
அண்ணாமலை லண்டன் பயணம்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று லண்டன் புறப்படுகிறார். 6 நாள் பயணமாக செல்லும் அண்ணாமலை லண்டன் வாழ் தமிழர்களை சந்தித்து, மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் குறித்துப் பேசவுள்ளார்.
டாஸ்மாக் கடைகள் மூடல்!
தமிழகம் முழுவதும் இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடும் பணி தொடங்குகிறது.
விஜய் பிறந்தநாள்!
நடிகர் விஜய் இன்று தனது 49 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 397வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள்!
நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள லியோ படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடலை இன்று வெளியிடுகிறது படக்குழு. முன்னதாக நள்ளிரவு 11.59 மணிக்கு லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
டிஎன்பிஎல் கிரிக்கெட்
தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் நெல்லை – சேலம் அணிகள் மோதுகின்றன.
TNPL: திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி!
’சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்’ : ஆளுநர் பேச்சு!