டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

top ten news today in Tamil January 9 2024

top ten news today in Tamil January 9 2024

போக்குவரத்து தொழிற்சங்கம் வேலைநிறுத்தம்!

ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், வாரிசுகளுக்கு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜனவரி 9) முதல் சிஐடியு, அண்ணா உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

தொழிற்சங்கம் வேலைநிறுத்த வழக்கு!

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

விழுதுகள் திட்டம்!

அரசுப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களை விழுதுகள் என்ற பெயரில் ஒன்றிணைக்கும் புதிய திட்டத்தை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.

கனமழை விடுமுறை!

கனமழை எச்சரிக்கை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம்!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய புரோ கபடி லீக் போட்டிகள்!

இன்றைய புரோ கபடி லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகளும், மற்றொரு போட்டியில் யுபி யோதாஸ், தமிழ் தலைவாஸ் அணிகளும் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 600-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகளிர் பிரீமியர் லீக் ஏலம்!

இந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலம் இன்று மும்பையில் துவங்குகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: இறால் வடை

கனமழை: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்த ஆட்சியர்!

top ten news today in Tamil January 9 2024

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share