ஸ்டார்ட் அப் இந்தியா கண்காட்சி! top ten news today in Tamil January 4 2024
ஜம்மு காஷ்மீரில் இன்று (ஜனவரி 4) நடைபெறும் ஸ்டார்ட் அப் இந்தியா கண்காட்சியை துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் துவக்கி வைக்கிறார்.
பாரத் சங்கல்ப் யாத்திரை!
பாஜக சார்பில் சென்னை கோடம்பாக்கம் ஐந்து விளக்கு பகுதியில் இன்று நடைபெறும் பாரத் சங்கல்ப் யாத்திரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.
விசிக ஆர்ப்பாட்டம்!
வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்தக்கோரி விசிக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
காங்கிரஸ் கட்சியில் இணையும் ஷர்மிளா
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும்,ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஷர்மிளா இன்று காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.
உதயநிதி – மோடி சந்திப்பு!
விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து கேலோ இந்தியா போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறார்,
அரையாண்டு தேர்வு!
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கன மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் இன்று முதல் துவங்குகிறது.
மெரி கிறிஸ்துமஸ் பாடல் வெளியீடு!
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகிறது.
வானிலை நிலவரம்!
தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 593-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜகவில் இணைந்த சப் இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட்: அண்ணாமலை சொல்வது என்ன?
top ten news today in Tamil January 4 2024