குடியரசு தலைவர் உரை! top ten news today in Tamil January 25 2024
75-வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களிடம் இன்று (ஜனவரி 25) உரையாற்றுகிறார்.
மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க பொதுக்கூட்டம்!
திமுக சார்பில் சென்னை அமைந்தகரையில் இன்று நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உரையாற்றுகிறார்.
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம்!
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.
வடலூர் ஜோதி தரிசனம்!
வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் 153-வது தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று நடைபெறுகிறது.
தேசிய வாக்காளர் தினம்!
டெல்லியில் இன்று இந்திய தேர்தல் ஆணையம் 14-வது தேசிய வாக்காளர் தினத்தை கொண்டாடுகிறது.
ஏரியா சபை கூட்டம்!
சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் இன்று முதல் பிப்ரவரி 8 வரை ஏரியா சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது.
தைப்பூச திருவிழா!
தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் இன்று சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற உள்ளது.
இந்தியா, இங்கிலாந்து மோதல்!
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 614-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆம்னி அட்ராசிட்டீஸ்: கிளாம்பாக்கம் – தாம்பரம் செல்ல பாயின்ட் டூ பாயின்ட் பஸ்கள்!
தொப்பூர் பாலத்தில் கோர விபத்து: தொடரும் கொடூரங்கள்!
top ten news today in Tamil January 25 2024