டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

top ten news today in Tamil February 5 2024

பிரதமர் மோடி உரை! top ten news today in Tamil February 5 2024

மக்களவையில் இன்று (பிப்ரவரி 5) குடியரசு தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு!

ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சம்பாய் சோரன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.

எடப்பாடி தருமபுரி பயணம்!

தருமபுரி மாவட்டம் அரூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலய திறப்பு விழாவில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கலந்து கொள்கிறார்.

பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு!

திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான தேர்தல் தயாரிப்பு குழு, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கின்றனர்.

புதிய திட்டப் பணிகள்!

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ரூ.11.98 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும்  ரூ.152.67 கோடி மதிப்பிலான 52 புதிய திட்டப்பணிகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்தியா, இங்கிலாந்து மோதல்!

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 625-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்!

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

வானிலை நிலவரம்!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும்.

புரோ கபடி போட்டிகள்!

இன்றைய புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகளும் மற்றொரு போட்டியில் தபாங் டெல்லி, புனேரி பல்தான் அணிகளும் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: பனீர் மக்கானி பாஸ்தா

இதுக்கு பேரு தான் மய்யம்: அப்டேட் குமாரு

top ten news today in Tamil February 5 2024

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share