டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

பிரதமர் அசாம் பயணம்!

அசாம் மாநிலத்தில் ரூ.11,600 கோடி மதிப்பிலான சாலைகள், மருத்துவக்கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள் திட்டங்களை பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 4) துவக்கி வைக்கிறார்.

ADVERTISEMENT

மதிமுக, சிபிஎம் தொகுதிப் பங்கீடு!

திமுக தனது கூட்டணி கட்சியான மதிமுக, சிபிஎம் கட்சிகளுடன் இன்று தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது.

ADVERTISEMENT

பாஜக ஆலோசனை!

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பாஜக தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் கோவையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

அமமுக நிர்வாகிகள் சந்திப்பு!

திண்டுக்கல் மாவட்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

கொமதேக மாநாடு!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநாடு இன்று நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 624-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பட்டதாரி ஆசிரியர் தேர்வு!

தமிழகத்தில் காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது.

வானிலை நிலவரம்!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும்.

புரோ கபடி லீக் போட்டி!

இன்றைய புரோ கபடி லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ், யு மும்பா அணிகளும் மற்றொரு போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன.

மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா மோதல்!

மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தளபதிய இயக்குறது யாரு? : அப்டேட் குமாரு

சண்டே ஸ்பெஷல்:  ஒரு நாளைக்கு எத்தனை காபி, டீ குடிக்கலாம்?

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share