மோடி தமிழகம் வருகை!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று (பிப்ரவரி 27) நடைபெறவுள்ள என் மண் என் மக்கள் யாத்திரையின் இறுதி நாள் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
ராஜ்ய சபா தேர்தல்!
உத்தரபிரதேசம், பிகார், கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில் 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை!
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் ஆலோசனை மேற்கொள்கிறார்.
வளர்ச்சி திட்டப் பணிகள்!
பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.10,417.22 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்!
பழைய ஓய்வூதியத் திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்!
சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த பிரவீன் ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பள்ளிக்கரணை போலீஸ் பூத் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 647-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கந்தசுவாமி கோவில் திருக்கல்யாணம்!
செங்கல்பட்டு திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
வானிலை நிலவரம்!
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று லேசான மழை பெய்யக்கூடும்.
நேபாளம், நமீபியா மோதல்!
இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் நேபாளம், நமீபியா அணிகள் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…