ஹேமந்த் சோரன் வழக்கு!
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை எதிர்த்து ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (பிப்ரவரி 2) விசாரணைக்கு வருகிறது.
ஓபிஎஸ் ஆலோசனை!
மக்களவை தேர்தலை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
திருப்பூர் உள்ளூர் விடுமுறை!
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து மோதல்!
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
திரைப்படங்கள் ரிலீஸ்!
சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி, மறக்குமா நெஞ்சம் திரைப்படங்கள் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 622-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சிம்பு 48 அப்டேட்!
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் சிம்பு 48 படத்தின் அப்டேட் இன்று வெளியாகிறது.
புத்தக திருவிழா!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது புத்தக திருவிழா இன்று தொடங்குகிறது.
ஹம்பகரேஸ்வரசுவாமி கோவில் குடமுழுக்கு!
கும்பகோணம் திருபுவனம் ஹம்பகரேஸ்வரசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு இன்று நடைபெறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பேக்கடு பாஸ்தா
அச்சத்தில் ஜே.எம்.எம் தலைவர்கள்: ஜார்க்கண்டில் நடக்கும் ஜனநாயக படுகொலை!