பிரதமர் மோடி – டிரம்ப் சந்திப்பு!
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை இன்று (பிப்ரவரி 13) சந்தித்து இருதரப்பு நாடுகளின் உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
அன்பழகன் அரங்கம் திறப்பு விழா!
சென்னை வளசரவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகன் அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். top ten news today
கோத்ரா வழக்கு விசாரணை!
குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.
அன்பில் மகேஷ் ஆலோசனை!
பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட பள்ளி கல்வி முதன்மை அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
உலக வானொலி தினம்!
வானொலியின் முக்கியத்துவம் மற்றும் அவசியத்தை உணர்த்தும் வகையில் இன்று உலக வானொலி தினமாக கொண்டாடப்படுகிறது.
போக்குவரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை!
போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை, சென்னை குரோம்பேட்டையில் இன்று நடைபெறுகிறது.
ரெட்ரோ பாடல் ரிலீஸ்!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் கண்ணாடி பூவே பாடல் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உகாண்டா, ஹாங்காங் மோதல்!
இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் உகாண்டா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. top ten news today