இடைக்கால பட்ஜெட் தாக்கல்! top ten news today in Tamil February 1 2024
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிரான மனு!
நிலமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் நேற்று கைது செய்யப்பட்ட ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறை சம்மன்களுக்கு எதிராக தாக்கல் செய்த மனு ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
டிஜிட்டம் மயமாக்கல்!
நாட்டின் கடல்சார் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பாக சாகர் சேது திட்டத்தின் மூலம் மாற்றியமைக்கும் வகையில், கடல்சார் ஒற்றைசாளர வசதி மற்றும் கடல்சார் வர்த்தகத்துறை பிரிவுகளை மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் இன்று தொடங்கி வைக்கிறார்.
அதிமுக ஆர்ப்பாட்டம்!
பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர் பட்டியலின சிறுமியை துன்புறுத்தியதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
பாமக பொதுக்குழு!
சென்னை எழும்பூர் ராணி மெய்யம்மை அரங்கத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
விமான சேவை!
சென்னை – அயோத்தி தினசரி விமான சேவையை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று துவக்கி வைக்கிறார்.
உள்ளூர் விடுமுறை!
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று 11 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பிரேமம் ரீ- ரிலிஸ்!
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின்பாலி, சாய்பல்லவி நடித்த பிரேமம் திரைப்படம் இன்று மறுதிரையிடல் செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 621-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: தலைக்கறி பாஸ்தா
கேலோ இந்தியாவை தொடர்ந்து அடுத்த டார்கெட் இதுதான் : மேடையில் உடைத்த உதயநிதி
top ten news today in Tamil February 1 2024