டாப் 10 நியூஸ்: அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ வழக்கு முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் வரை!

Published On:

| By Selvam

அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 14) விசாரணைக்கு வருகிறது.

பணிநியமன ஆணை வழங்குதல்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தொகுதி II-A பணிக்கான நெடுஞ்சாலைத் துறையின் உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று பணிநியமன ஆணைகளை வழங்குகிறார்.

செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கையெழுத்து இயக்கம்!

கோயம்பேடு பேருந்து நிலையத்தை பூங்காவாக மாற்றக்கோரி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை சென்னையில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைக்கிறார்.

ராமநாதசுவாமி கோவில் நடை அடைப்பு!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண கடைசி நாள் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் தரப்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம்!

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 150-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சுதந்திர தினம், தொடர் விடுமுறையை ஒட்டி பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மதிமுக ஆர்ப்பாட்டம்!

தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதை கண்டித்து மதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கோட் அப்டேட்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கும் உணவுகள் எது தெரியுமா?

கிச்சன் கீர்த்தனா: பப்பாளிக்காய் மசாலா பராத்தா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share