தேர்தல் பிரச்சாரம்!
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் – நாமக்கல், நாகப்பட்டினம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – சிவகங்கை, மதுரை
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் – தருமபுரி, கிருஷ்ணகிரி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை – கோவை
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – தருமபுரி
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா – கடலூர்
முப்படை மாநாடு!
டெல்லியில் இன்று (ஏப்ரல் 8) முப்படைகளின் கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு முயற்சிகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனை பகிர்வு மாநாடு முப்படைகளின் தளபதி அனில் சவுகான் தலைமையில் நடைபெற உள்ளது.
சூரிய கிரகணம்!
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இன்று நிகழ்கிறது.
ஐ.பெரியசாமி வழக்கு!
வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
புதுக்கோட்டை உள்ளூர் விடுமுறை!
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் போராட்டம்!
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட விசாரணை நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் முறையை E-Filling-ஆக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் ஜாக் கூட்டமைப்பினர் இன்று முதல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
சென்னை, கொல்கத்தா மோதல்!
இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
புஷ்பா 2 டீசர் ரிலீஸ்!
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா 2 படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
வானிலை நிலவரம்!
தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன்காரணமாக, தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழக டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 23-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பனானா ஐஸ் ஷேக்
LSGvsGT : தொடர்ந்து 3வது வெற்றி… யாஷ் பந்துவீச்சில் சுருண்டது குஜராத் அணி!