தேர்தல் பிரச்சாரம்!
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா – விருதுநகர், சிதம்பரம், கரூர், திருச்சி
திமுக தலைவர் ஸ்டாலின் – புதுச்சேரி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – திருவள்ளூர், சென்னை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை – கோவை
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – வேலூர்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா – கடலூர்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் – சென்னை
ஆம் ஆத்மி போராட்டம்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து நாடு முழுவதும் இன்று (ஏப்ரல் 7) ஆம் ஆத்மி கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
புகழேந்தி இறுதிச்சடங்கு!
மறைந்த விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடல் இன்று அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
கள்ளழகர் திருவிழா!
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழாவின் போது தோல் பையில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பவர்கள், நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் இன்று முதல் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 23-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய ஐபிஎல் போட்டிகள்!
இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை, டெல்லி அணிகளும், மற்றொரு போட்டியில் லக்னோ, குஜராத் அணிகளும் மோதுகின்றன.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனி, நெதர்லாந்து மோதல்!
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் காலிறுதி போட்டியில் ஜெர்மனியின் டொமினிக் கூப்பர் மற்றும் நெதர்லாந்தின் டேலன் கிரிக்ஸ்பூர் ஆகியோர் இன்று மோதுகின்றனர்.
உலக சுகாதார தினம்!
உடல்நலன் மற்றும் மனநலன் பிரச்சனைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் இன்று சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஓமன், நமீபியா மோதல்!
இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஓமன், நமீபியா அணிகள் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…