டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

தேர்தல் பிரச்சாரம்!

திமுக தலைவர் ஸ்டாலின் – சிதம்பரம், மயிலாடுதுறை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – தஞ்சாவூர், நாகப்பட்டினம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை – கோவை

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா – வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் – ஸ்ரீபெரும்புதூர், சென்னை

தஞ்சாவூர் சித்திரை பெருவிழா!

தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை பெருவிழா இன்று (ஏப்ரல் 6) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 350 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுகிறது.

புத்தக வெளியீடு நிகழ்ச்சி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்த உத்தரவை மறுபரிசீலனை செய்து இன்று மதியம் 1.30 மணிக்குள் புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோவை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 22-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

என்ஐஓஎஸ் தேர்வுகள் துவக்கம்!

தேசிய திறந்தநிலை பள்ளி தேர்வுகள் இன்று முதல் துவங்குகிறது.

ராஜஸ்தான், பெங்களூரு மோதல்!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

மாதா ஆலய பெருவிழா!

புதுச்சேரி வில்லியனூர் மாதா ஆலய பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

செர்பியா, பிரான்ஸ் மோதல்!

மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் காலிறுதி போட்டியில் செர்பியாவின் டுசான் லஜோவிக், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர் முல்லர் ஆகியோர் இன்று மோதுகின்றனர்.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: மீன் சொதி

”ஒரு மனுஷன் பொய் பேசலாம்… ஆனால், ஏக்கர் கணக்கில் பேசக்கூடாது” : எடப்பாடியை விமர்சித்த ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share