டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

தேர்தல் பிரச்சாரம்!

திமுக தலைவர் ஸ்டாலின் – தென் சென்னை, மத்திய சென்னை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – சேலம், ரோடு ஷோ

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை – கோவை

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா – மதுரை, தென்காசி, விருதுநகர்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – திருவள்ளூர், சென்னை

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 17) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.

செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு!

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்ககோரிய மனுவின் மீது தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி  செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

ராமநவமி!

ராமர் பிறந்தநாளான ராமநவமியை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவிலில் இன்று சிறப்பு தரிசனம் நடைபெற உள்ளது.

குஜராத், டெல்லி மோதல்!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் குஜராத், டெல்லி அணிகள் மோதுகின்றன.

வானிலை நிலவரம்!

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ராவணன் ரீ ரிலீஸ்!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்து கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான ராவணன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 33-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சீயான் 62 படம் அப்டேட்!

அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சீயான் 62 படத்தின் அப்டேட் இன்று வெளியாகிறது.

மனுஷி டிரைலர் ரிலீஸ்!

கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் மனுஷி படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.

ஹாங்காங், மலேசியா மோதல்!

இன்றையை ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங், மலேசியா அணிகள் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: முருங்கை – தால் சூப்

மின்னம்பலம் மெகா சர்வே: தர்மபுரி… தட்டிப் பறிப்பது யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share