தேர்தல் பிரச்சாரம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – ஆரணி, திருவண்ணாமலை
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி – கன்னியாகுமரி, நெல்லை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை – கோவை
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா – கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் – மதுரை
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – கள்ளக்குறிச்சி
டிரோன்கள் பறக்க தடை!
நெல்லையில் நாளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரத்தை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 11) முதல் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகை!
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
சிவகார்த்திகேயன் அடுத்த படம்!
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது.
மதுரை சித்திரை திருவிழா!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வாஸ்து சாந்தியுடன் இன்று தொடங்குகிறது.
மும்பை, பெங்களூரு மோதல்!
இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
வானிலை நிலவரம்!
தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும்.
இன்று வெளியாகும் திரைப்படங்கள்!
விஜய் ஆண்டனியின் ரோமியோ மற்றும் ஜிவி பிரகாஷின் டியர் ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 27-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
LUCKY BASKHAR டீசர் ரிலீஸ்!
வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள LUCKY BASKHAR படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: அன்னாசி சல்ஸா
GTvsRR : 19வது ஓவரில் ட்விஸ்ட்… கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற குஜராத்!