டாப் 10 நியூஸ்: காசி தமிழ் சங்கமம் முதல் திமுக ஆலோசனை கூட்டம் வரை!

Published On:

| By Selvam

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி!

தமிழகம் மற்றும் காசி இடையிலான வரலாற்று ரீதியிலான தொடர்புகளை கொண்டாடும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தவகையில் இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று (பிப்ரவரி 15) முதல் பிப்ரவரி 24-ஆம் தேதி வரை உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறுகிறது. top ten news today

திமுக ஆலோசனை கூட்டம்!

சென்னை தெற்கு மாவட்ட திமுக 23 அணிகளின் ஆலோசனை கூட்டம் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

அதிமுக இலக்கிய அணி ஆலோசனை!

அதிமுக இலக்கிய அணி மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.

சிபிஎஸ்சி பொதுத்தேர்வு!

நாடு முழுவதும் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்சி பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை 42 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

இளம் பேச்சாளர்களுக்கு பயிற்சி முகாம்!

திமுக இளைஞரணி சார்பில் இளம் பேச்சாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாமை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கி வைக்கிறார்.

ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஷாலிமர் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 7 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 4 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்திய அணி துபாய் பயணம்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இன்று துபாய் நாட்டிற்கு பயணம் செய்கிறது. வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி வங்கதேச அணியுடன் இந்தியா மோதுகிறது.

‘கிங்ஸ்டன்’ பாடல் ரிலீஸ்!

கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் ‘Celebration Of Death’ பாடல் இன்று வெளியாகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. top ten news today

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share