டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Monisha

top ten news tamil

பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்றுடன் நிறைவடைகிறது.

குடியரசுத் தலைவர் சுற்றுப்பயணம்!

அசாம் மாநிலத்தில் இன்று முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மணீஷ் சிசோடியா ஜாமீன் மனு!

மதுபான கொள்கை வழக்கில் கைதான டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை இன்று டெல்லி உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.

கீழடி அகழாய்வு!

கீழடியில் 9 ஆம் கட்ட அகழாய்வு பணிகளை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைக்கிறார்.

பாஜக ஆண்டு விழா!

பாரதிய ஜனதா கட்சியின் 44வது ஆண்டு துவக்க விழாவினை “ஸ்தாபன தினம்” என்ற பெயரில் இன்று பாஜகவினர் கொண்டாட உள்ளனர்.

அனுமன் ஜெயந்தி!

நாடு முழுவதும் இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதில் 9.76 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

நீட் தேர்வு!

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 320வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபிஎல் 2023!

ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் இன்று கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

கிச்சன் கீர்த்தனா: சுரைக்காய் – கடலைப்பருப்பு தால்

மீடியா ஒன் தடை நீக்கம்: தீர்ப்பை வரவேற்ற சென்னை பத்திரிகையாளர் மன்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share