பணி நியமன ஆணை!
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 71 ஆயிரம் பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 20) பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.
அதிமுக பொதுக்கூட்டம்!
அரியலூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.
மாநில செயற்குழு கூட்டம்!
கடலூர் மாவட்டத்தில் இன்று பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
சிபிஎம் ஆர்ப்பாட்டம்!
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி விலக வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
பால் விலை உயர்வு!
தமிழகத்தில் இன்று முதல் ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி, வல்லபா, சீனிவாசா போன்ற தனியார் நிறுவனங்களின் பால் மற்றும் தயிர் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது.
பொம்மை நாயகி பாடல்!
ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி படத்தின் கடற்கர காத்து வீசுதே பாடல் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 244-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அமமுக ஆலோசனை கூட்டம்!
தஞ்சாவூர் மாவட்ட அமமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
வேலைவாய்ப்பு முகாம்!
சென்னையில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 49 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.