டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (ஜனவரி 10) அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

அதிமுக பொதுக்குழு வழக்கு!

அதிமுக பொதுக்குழு வழக்கின் இறுதி விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

பயிர் காப்பீடு திட்டம்!

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இயற்கை இடர்பாட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

ADVERTISEMENT

மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்!

இன்று நடைபெற இருந்த மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அமமுக ஆலோசனை கூட்டம்!

அமமுக தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற உள்ளது.

இந்தியா, இலங்கை மோதல்!

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

பதான் டிரைலர் வெளியீடு!

நடிகர் ஷாருக்கானின் பதான் படத்தின் டிரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 233-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SA 20 லீக் போட்டி!

தென் ஆப்பிரிக்க நாட்டில் SA 20 லீக் எனும் டி20 தொடர் இன்று முதல் ஆரம்பமாக உள்ளது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 59 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெளியேறிய ஆளுநர்: என்னதான் நடந்தது சட்டமன்றத்தில்? வெளிவராத லைவ் தகவல்கள்!

ஆளுநர் உரை பழங்கதை, புதிது எதுவும் இல்லை: ஓபிஎஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share