ஜி20 மாநாடு!
இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 மாநாடு டெல்லியில் இன்றும் (செப்டம்பர் 9) நாளையும் நடைபெற உள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து!
ஜி20 மாநாட்டை முன்னிட்டு உலக நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் இன்று விருந்து அளிக்க உள்ளார். இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.
மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம்!
விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு பனையூரில் நடை பெற உள்ளது.
சீமானுக்கு போலீஸ் சம்மன்!
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் விசாரணைக்கு இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று வளசரவாக்கம் காவல் நிலையம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 476வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் கோயம்புத்தூர், தேனி, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மாரிமுத்து உடல் அடக்கம்!
மாரடைப்பால் உயிரிழந்த இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துவின் உடல் தேனியில் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது.
‘ரத்தம்’ டிரெய்லர்!
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ரத்தம் படத்தின் டிரெய்லரை இயக்குநர்கள் வெங்கட் பிரபு மற்றும் பா.ரஞ்சித் ஆகியோர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளனர்.
ஆசியக் கோப்பை!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோத உள்ளன.
யுஎஸ் ஓபன்!
இன்று நடைபெற்ற யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அரையிறுதி போட்டியில் செர்பியன் வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.