டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Monisha

top ten news in tamil today september 13 2023

மத்திய அமைச்சரவை கூட்டம்!

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (செப்டம்பர் 13) நடைபெற உள்ளது.

‘இந்தியா’ ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் இல்லத்தில் இன்று நடைபெற உள்ளது.

அமலாக்கத்துறை மனு மீது தீர்ப்பு!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்க கோரிய அமலாக்கத்துறையின் மனு மீது தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

அதிமுக ஆர்ப்பாட்டம்!

மீன்பிடித் துறைமுகப் பணிகள் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து மரக்காணத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

சந்திரபாபு நாயுடு மனு!

ஊழல் தடுப்பு நீதிமன்றம் விதித்த 14 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவை எதிர்த்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

ஆவணித் திருவிழா தேரோட்டம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆவணித் திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் 480வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சந்திரமுகி லிரிக்கல் வீடியோ!

சந்திரமுகி 2 படத்தின் ‘தோரி போரி’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

’புளூ ஸ்டார்’ பாடல்!

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புளூ ஸ்டார்’ படத்தின் ’ரெயிலின் ஒலிகள்’ பாடல் இன்று வெளியாக உள்ளது.

Asia Cup: இலங்கைக்கு எதிராக அபார வெற்றி.. பைனலுக்கு முன்னேறிய ‘இந்தியா’

கிச்சன் கீர்த்தனா: புழுங்கலரிசி சீடை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share