டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Monisha

top ten news in tamil today september 12 2023

சீமான் ஆஜர்!

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் விசாரணைக்காக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செப்டம்பர் 12) ஆஜராக உள்ளார்.

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்!

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று முதல் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

டெங்கு ஒழிப்பு ஆலோசனை!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், கொசு ஒழிப்பு குறித்து தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

சந்திரபாபு நாயுடு மனு விசாரணை!

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், சிறைக்கு பதிலாக வீட்டு காவலில் வைக்க கோரி தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

திருப்பதியில் தரிசனம் ரத்து!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ பணிகள் காரணமாக இன்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் 479வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடிவேலு பிறந்தநாள்!

நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலு பிறந்தநாள் இன்று.

ஆசியக் கோப்பை!

ஆசியக் கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்றில் இந்தியா – இலங்கை அணிகள் மோத உள்ளன.

கிச்சன் கீர்த்தனா: பால் அல்வா!

“50-வது படம் சினிமா பயணத்தின் மைல்கல்” – விஜய் சேதுபதி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share