அமைச்சரவை கூட்டம்!
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்டோபர் 31) அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
2ஜி வழக்கு தீர்ப்பு தேதி!
2ஜி மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் பத்திர முறை வழக்கு!
அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கும் தேர்தல் பத்திர முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம்!
மேயர் பிரியா தலைமையில் இன்று காலை 10 மணியளவில் சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் நடைபெற உள்ளது.
இந்திரா காந்தி நினைவு தினம்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
மின்சார ரயில்கள் ரத்து!
பராமரிப்பு பணி காரணமாக இன்று தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே காலை 10.18 மணி முதல் 2.45 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது. இதனால் பயணிகளின் வசதிக்காக 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 528வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இசை வீடியோ!
நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் 10000 PAX இசை வீடியோ இன்று மதியம் 12.12 மணிக்கு வெளியாக உள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள 31வது லீக் போட்டியில் பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகள் மோத உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
