ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்!
தமிழ்நாடு அரசு 49 சிறைவாசிகளை விடுதலை செய்திட பரிந்துரைத்த கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்காமல் தாமதிக்கும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும், உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் இன்று (அக்டோபர் 28) ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
ஆளுநரை சந்திக்கும் பாஜக குழு!
தமிழ்நாட்டிற்கு வந்துள்ள 4 பேர் கொண்ட மத்திய பாஜக குழு இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க உள்ளது.
தேவர் குருபூஜை!
பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை விழா இன்று தொடங்குகிறது.
போக்குவரத்துத் துறை ஆலோசனை!
தீபாவளி பண்டிகைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
சந்திர கிரகணம்!
இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு 11.31 மணிக்கு தொடங்க உள்ளது. பகுதி சந்திர கிரகணமாக நிகழ உள்ள இந்த வானியல் நிகழ்வு இந்தியாவில் தென்படும்.
திருப்பதி தேவஸ்தானம் மூடல்!
சந்திர கிரகணம் நிகழ்வதால் இன்று இரவு 7.05 மணி முதல் நாளை அதிகாலை 3.15 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 525வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
ஜப்பான் இசை வெளியீட்டு விழா!
நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற உள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள 27வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து மற்றும் 28வது லீக் போட்டியில் நெதர்லாந்து பங்களாதேஷ் அணிகள் மோத உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…