டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Monisha

top ten news in tamil today october 27 2023

பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர்!

சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (அக்டோபர் 27) கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார்.

ADVERTISEMENT

மத்திய பாஜக குழு சென்னை வருகை!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டிற்கு முன்பு நடந்த கொடி கம்பம் பிரச்சனை தொடர்பாக ஆய்வு செய்ய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அமைத்த 4 பேர் கொண்ட குழு இன்று சென்னை வருகிறது.

ADVERTISEMENT

வரைவு வாக்காளர் பட்டியல்!

அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

ADVERTISEMENT

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மருது பாண்டியர்களின் 222வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாட்கள் மற்றும் திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் இன்று கூடுதலாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 524வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தென் தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மார்கழி திங்கள் ரிலீஸ்!

மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள மார்கழி திங்கள் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர் சிவக்குமார் பிறந்தநாள்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிவக்குமாரின் 82வது பிறந்தநாள் இன்று.

ஐசிசி உலகக் கோப்பை!

ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள 26வது லீக் போட்டியில் பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: பொன்னாங்கண்ணி குழம்பு

ஆளுநர் ஆத்தும் டீ: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share