டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

By Minnambalam

|

Published on 7 Nov 2023, 7:03 AM

top ten news in tamil today november 7 2023

சட்டசபைத் தேர்தல்!

மிசோரம் மாநிலத்தின் 40 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கர் மாநிலத்தின் 20 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும் இன்று (நவம்பர் 7) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. top ten news in Tamil today November 7 2023

ADVERTISEMENT

ஐடி சோதனை!

தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இன்று 5வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

ஜல் தீபாவளி திட்டம்!

மத்திய அரசின் ஜல் தீபாவளி திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

ADVERTISEMENT

ஓபிஎஸுக்கு எதிரான வழக்கு விசாரணை!

அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்துவதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

எம்பிபிஎஸ் கலந்தாய்வு!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்!

கோவை மாவட்டத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 535வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கமல்ஹாசன் பிறந்தநாள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான உலக நாயகன் கமல்ஹாசனின் 69வது பிறந்தநாள் இன்று.

ஐசிசி உலகக் கோப்பை!

ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள 39வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. top ten news in Tamil today November 7 2023

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உலகக்கோப்பையில் இருந்து இலங்கையை வெளியேற்றிய வங்கதேசம்!!

கிச்சன் கீர்த்தனா: கட்டோரி சாட்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel