டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Monisha

top ten news in tamil today november 18 2023

சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்! top ten news in Tamil today November 18 2023

தமிழ்நாடு சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று (நவம்பர் 18) கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

ADVERTISEMENT

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

சட்டமன்றத்தில் இன்று காலை 9 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அறையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

பாமக பொதுக்கூட்டம்!

ஊட்டியில் பாமக பொதுக்கூட்டம் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

தளபதி விஜய் நூலகம்!

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ‘தளபதி விஜய் நூலகம்’ இன்று தொடங்கப்பட உள்ளது. தாம்பரத்தில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைக்க உள்ளார்.

சூரசம்ஹாரம்!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற உள்ளது.

வ.உ.சி நினைவு தினம்!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 87வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

மின்சார ரயில்கள் ரத்து!

சென்னை – அரக்கோணம் வழித்தடத்தில் இன்று இரவு 10 முதல் நாளை காலை 10 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் 546வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நயன்தாரா பிறந்தநாள்!

திரைத்துறையின் முன்னணி நடிகையான நயன்தாராவின் 39வது பிறந்தநாள் இன்று. top ten news in Tamil today November 18 2023

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேலைவாய்ப்பு : அண்ணா  பல்கலையில் பணி!

கிச்சன் கீர்த்தனா: தேன், மா, இஞ்சி ஸ்பிரெட்

மோடி காட்டும் தேசிய கொடி: அப்டேட் குமாரு

சிப்காட் போராட்டம்: விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share