டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Monisha

top ten news in tamil today november 17 2023

சட்டப்பேரவை தேர்தல்! top ten news in Tamil today November 17 2023

230 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாகவும், 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் 70 தொகுதிகளுக்கு 2வது கட்டமாகவும் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

சீமான் உரை!

தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கவும், சென்னை உயர்நீதிமன்றம் என்பதை ’தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ என்று பெயர் மாற்றம் செய்ய கோரியும் இன்று காலை 11 மணியளவில் உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்ற உள்ளார்.

ADVERTISEMENT

மிதிலி புயல்!

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு மாலத்தீவு பரிந்துரைத்த மிதிலி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

திருவண்ணாமலை தீபத்திருவிழா!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ரோஜா பிறந்தநாள்!

நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவின் 51வது பிறந்தநாள் இன்று.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 545வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

’பார்க்கிங்’ டிரெய்லர்!

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள பார்க்கிங் படத்தின் டிரெய்லர் இன்று காலை 10.29 மணிக்கு வெளியாக உள்ளது.

‘சைரன்’ டீசர்!

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் படத்தின் தெலுங்கு டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்!

சென்னையில் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் இன்று தொடங்க உள்ளது. வரும் நவம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 417 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். top ten news in Tamil today November 17 2023

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி: முகத்தை ‘பளிச்’ ஆக்கும் கொரியன் டிப்ஸ்!

கிச்சன் கீர்த்தனா: ஃப்ரூட் பர்ஃபைட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share