இந்தியா – பங்களாதேஷ் ரயில் சேவை!
இந்தியா – பங்களாதேஷ் இடையேயான ரயில் சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவும் இணைந்து காணொளி காட்சி மூலமாக இன்று (நவம்பர் 1) காலை 11:00 மணியளவில் தொடங்கி வைக்க உள்ளனர்.
டீசல் பேருந்துகளுக்கு தடை!
டெல்லியில் காற்று மாசு மோசமடைந்திருப்பதாக ஆய்வறிக்கை வெளியானதை தொடர்ந்து இன்று முதல் டீசல் பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு மின் கட்டணம்!
தமிழ்நாட்டில் சிறு அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இரவு நேர ரயில்கள் ரத்து!
பரங்கிமலை வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே இரவு 10.20 முதல் 11.20 மணி வரை புறப்படும் இரவு நேர ரயில்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி இரவு 10.10 மணிக்கு புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 529வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லியோ வெற்றி விழா!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் வெற்றி விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
தங்கலான் டீசர்!
நடிகர் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் டீசர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக உள்ளது.
சச்சின் டெண்டுல்கர் சிலை!
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில் அவரது உருவ சிலை மும்பை வான்கடே மைதானத்தில் இன்று திறக்கப்பட உள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள 32வது லீக் போட்டியில் நியூசிலாந்து – தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் கொழுக்கட்டை