டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Monisha

top ten news in tamil

டெல்டா மாவட்டத்தில் முதல்வர் ஆய்வு!

திருச்சி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளை இன்று ஆய்வு செய்ய உள்ளார்.

ADVERTISEMENT

அதிமுக வழக்கு விசாரணை!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் 2வது நாளாக இன்று நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

விசிக ஆர்ப்பாட்டம்!

இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் அனைவருக்கும் வழிபாட்டு உரிமை உண்டு என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் இன்று மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை!

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத் துறை, காவல்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் 384வது நாளாக இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 – 41 டிகிரி செல்ஷியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒரு சில இடங்களில் இயல்பில் இருந்து 2 – 4 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று வெளியாகும் திரைப்படங்கள்!

திரையரங்குகளில் இன்று போர் தொழில், டக்கர், பெல், விமானம் ஆகிய 4 தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

’காதல் கன்டிஷன்ஸ் அப்ளை’ டீசர்!

’காதல் கன்டிஷன்ஸ் அப்ளை’ (kaadhal conditions apply) படத்தின் டீசரை இன்று மாலை 5.04 மணிக்கு இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட உள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நேற்று நடைபெற்ற 2வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. தொடர்ந்து 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணி இன்று 3வது நாள் ஆட்டத்தில் பேட்டிங்கை தொடர உள்ளது.

புரோ ஹாக்கி லீக்!

புரோ ஹாக்கி லீக் தொடரில் இன்று நடைபெற உள்ள போட்டியில் நெதர்லாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

தென்மேற்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தேசிய விளையாட்டு போட்டிகள்: பங்கேற்காத தமிழக மாணவர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share