நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்!
தமிழகத்தில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 6) திறந்து வைக்க உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வழக்கு விசாரணை!
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது வேட்புமனுவில் தவறான தகவல் அளித்ததாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்வு!
அதாயி கல்விக் குழுமம் சார்பில் மூத்த அரசியல் தலைவர் காயிதே மில்லத் பிறந்தநாள் விழா மற்றும் உயர்கல்வி வழிகாட்டும் விழா காயிதே மில்லத் மணிமண்டபத்தில் இன்று நடைபெற்ற உள்ளது. இந்த நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார்.
செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம்!
கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ்மொழி அதிகாரப்பூர்வமாகச் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் இன்று.
வட்டார கல்வி அலுவலர் பணி!
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
பொறியியல் கலந்தாய்வு ரேண்டம் எண்!
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர விரும்புவோருக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது.
திருத்தேர் உற்சவம்!
வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் திருத்தேர் உற்சவம் இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 381வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்ஷியஸ் அளவில் இருக்கக்கூடும். இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இசை வெளியீடு!
ராம் சங்கையா இயக்கத்தில் உருவாகியுள்ள தண்டட்டி திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் இன்று வெளியாக உள்ளது.
கிச்சன் கீர்த்தனா: ஆனியன் ரிங்க்ஸ்
“தொழில் நிறுவனங்களை சந்தித்து பேசினால் முதலீடுகள் வராது” – ஆளுநர் ரவி