டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Monisha

top ten news in tamil

எதிர்க்கட்சிகள் கூட்டம்!

பாஜக அரசுக்கு எதிராக பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று (ஜூன் 23) எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

ADVERTISEMENT

பிரதமர் மோடி நிகழ்ச்சி!

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி இன்று வாஷிங்டனில் உள்ள சர்வதேச வர்த்தக மையத்தில் இந்திய வம்சாவளி சமூகத்தின் முக்கியத் தலைவா்கள் சந்திப்பில் உரையாற்றுகிறார்.

ADVERTISEMENT

செந்தில் பாலாஜி வழக்கு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது.

ADVERTISEMENT

ஆளுநர் டெல்லி பயணம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

ரோப் கார் நிறுத்தம்!

பழனி மலை கோவிலுக்கு இயக்கப்படும் ரோப் கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக இன்று நிறுத்தப்படுகிறது.

விதிகளை மீறினால் அபராதம்!

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் விதிகளை மீறினால் இன்று முதல் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று 398வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வேட்டையாடு விளையாடு ரீ ரிலீஸ்!

கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2006 ஆண்டு வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படம் இன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸாக உள்ளது.

ஓடிடியில் கழுவேத்தி மூர்க்கன்!

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்மொழிப் பூங்காவில் உணவுத் திருவிழா!

கிச்சன் கீர்த்தனா: கம்பு இட்லி

Photo of author
Monisha
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share